லஞ்சம் வாங்கியதாக கைதான கிராமசேவகர்! ஒரு பெண்ணின் பொய் குற்றச்சாட்டிலேயே கிராமசேவகர் கைதானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, வீடு மீதும் தாக்குதல்...

ஆசிரியர் - Editor I
லஞ்சம் வாங்கியதாக கைதான கிராமசேவகர்! ஒரு பெண்ணின் பொய் குற்றச்சாட்டிலேயே கிராமசேவகர் கைதானதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு, வீடு மீதும் தாக்குதல்...

நிவாரணம் வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கிராமசேவகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமவேகர் லஞ்சம் வாங்கவில்லை என கூறும் கிராம மக்கள், 

கிராம சேவகரை ஒரு குடும்பம் வேண்டுமென்றே பொய்க் குற்றச்சாட்டினை சுமத்தி கைது செய்யும்படி செய்துள்ளதாகவும், அந்த குடும்பம் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான மோசடி வேலைகளை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

தலைமன்னார் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கர்ப்பவதி பெண் ஒருவருக்கு நிவாரணம் வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதாக கூறி நேற்றுமுன்தினம் கிராமசேவகர் கைது செய்யப்பட்டார். 

எனினும் இந்த கைது நடவடிக்கை திட்டமிடப்பட்டது என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும் இந்த குடும்பம் தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் உதவியும் போதைப் பொருள் வைத்து லஞ்சம் வாங்குவது, 

லீசிங் நிறுவன ஊழியர்கள் திருடியதாக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்துவது உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர். மேலும் குறித்த சம்பவத்திற்கு பிரதான காரணமாக உள்ளது ஒரு பெண் எனவும்

மக்கள் கூறும் நிலையில் குறித்த பெண்ணின் வீட்டினை பொதுமக்கள் அடித்து நொருக்கியுள்ளதுடன், பொய்யான குற்றச்சாட்டில் கைதான கிராமசேவகரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். எனவும் கூறியுள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு