யாழ்.மாவட்டத்தில் அபாயம் உச்சம்! 2387 தொற்றாளர்கள், 8 மரணங்கள் பதிவு, மக்களிடம் சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் அபாயம் உச்சம்! 2387 தொற்றாளர்கள், 8 மரணங்கள் பதிவு, மக்களிடம் சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை...

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் டெங்குக் காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உணரப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், 

பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். எனவும் விசேடமாக யாழ்.மாவட்டத்தில் உச்ச அளவில் டெங்கு காய்ச்சல் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரித்துள்ளார். 

இது குறித்து நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தொிவித்த சுகாதார பணிப்பாளர் மேலும் கூறுகையில், வடமாகாணத்தில் இந்த வருடம் 8 மாதங்களில் சுமார் 2772 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி யாழ்.மாவட்டத்தில் 2387 பேரும், மன்னார் மாவட்டத்தில் 177 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 94 பேரும், வவனியா மாவட்டத்தில் 67 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தல் 47 பேரும் இனங்காணப்பட்டனர். 

மேலும் 8 தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர். அதேபோல் தற்போதுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பூரணமாக குணப்படுத்தக்கூடிய நோயாகும். 

எனினும் 8 இறப்புக்கள் ஏற்படுவதற்கு காரணம் காலம் தாழ்த்தி சிகிச்சைக்கு வருவதாகும். எனவே கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மூட்டுக்களில் வலி  போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரச வைத்தியசாலைக்கு செல்லுங்கள். 

அங்கே தொற்றை அடையாளம் காண்பதற்கும் அதனை குணப்படுத்துவதற்கும் போதிய வசதிகள் காணப்படுகின்றன. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருந்து டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அழிக்கவேண்டும் என பணிப்பாளர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு