முகமாலை - இத்தாவில் பகுதியில் வீடொன்று முற்றுகை! வெடி மருந்து மற்றும் பொருள் பாகங்களுடன் ஒருவர் கைது..

ஆசிரியர் - Editor I
முகமாலை - இத்தாவில் பகுதியில் வீடொன்று முற்றுகை! வெடி மருந்து மற்றும் பொருள் பாகங்களுடன் ஒருவர் கைது..

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு தேடுதலில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து வெடிமருந்து மற்றும் வெடிபொருள் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

குறித்த நபரின் வீட்டில் தேடுதலில் ஈடுபட்டபோது 910 கிராம் வெடிமருந்து கழற்றிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டும் நல்ல நிலையில் 3 மோட்டார் குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.

குறித்த நபரை கைது செய்த பளை பொலிசார் இன்று (19) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை பளை பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு