கர்ப்பமானதையும் கவர்ச்சியாக அறிவித்த நடிகை!!
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் ஒருவரான பிபாஷா பாசு கிளாமர், கவர்ச்சி என ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றார்.
அவர் தமிழில் தளபதி விஜய் நடித்த 'சச்சின்' படத்திலும் ஒரு முக்கிய கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்தார். 'டேய் டேய் கட்டிக்கோடா' என்ற பாடலுக்கு நடனமாடியவர். பெங்காலி மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் சில பல காதல்களைச் சந்தித்த அவர் 2016 ஆம் ஆண்டு கரண் சிங் குரோவர் என்ற நடிகரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 6 வருடங்களுக்குப் பின் தனது 43 ஆவது வயதில் கர்ப்பம் அடைந்துள்ளார்.
அது குறித்து இன்ஸ்டாகிராமில் அரை குறையாக அணிந்த மேலாடை ஒன்றை மட்டும் அணிந்து கர்ப்பம் தரித்த வயிறு தெரிய கணவருடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனது தாய்மை குறித்து அறிவித்துள்ளார்.