கார்த்தியுடன் கபடி விளையாடிய அதிதி சங்கர்!!

ஆசிரியர் - Editor II
கார்த்தியுடன் கபடி விளையாடிய அதிதி சங்கர்!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கடந்த 12 ஆம் திகதி வெளியான 'விருமன்' படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருந்தார். 

இப் படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விருமன் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை படக்குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி, அதிதி சங்கர் மற்றும் படக்குழு பலரும் அவர்களுடைய குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர். அப்பொழுது நடிகர் கார்த்தியுடன் அதிதி சங்கர் கபடி விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு