யாழ்.உடுவிலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமைத்த செஞ்சோலை படுகொலை நினைவேந்தலில் குழப்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.உடுவிலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஒழுங்கமைத்த செஞ்சோலை படுகொலை நினைவேந்தலில் குழப்பம்..!

யாழ்.உடுவில் பகுதியில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் ஒழுங்கமைத்த செஞ்சோலை படுகொலையின் 16ம் ஆண்டு நினைவேந்தலை நடத்துவதற்கும், உலருணவு பொருட்களை வழங்கவும் முயற்சித்த நிலையல் அங்கிந்தவர்களால் குழப்ப நிலையேற்பட்டிருக்கின்றது. 

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, உடுவில் ஆலடி முகாம் பகுதியில் 16வது செஞ்சோலை படுகொலை நினைவேந்தலை அனுஷ்டிக்க நேற்று மாலை 4 மணியளவில் செய்வதற்கு ஒழுங்குபடுத்தப்பட்டு அங்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் சென்றிருந்தனர்.

இதன்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலருக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் உலருணவு பொருட்களும் வழங்கப்பட்டது. இதன்போது அங்கு கூடிய அப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலர் தமக்கு இது பற்றி அறிவிக்கவில்லை என்றுகூறி அங்கு குழப்பத்தில் ஈடுபட்டதுடன் ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்கவும் அனுமதிக்கவில்லை. 

இதனையடுத்து அங்கு ஏற்பட்ட குழப்பம் வாய்த்தர்க்கமாக மாறவே நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட கட்சி உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேறினார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு