SuperTopAds

தரம் 5 மாணவன் மீது தாக்குதல்! பாடசாலை அதிபர் தலைமறைவு, ஆசிரியர் கைது...

ஆசிரியர் - Editor I
தரம் 5 மாணவன் மீது தாக்குதல்! பாடசாலை அதிபர் தலைமறைவு, ஆசிரியர் கைது...

தரம் 5 மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படும் பாடசாலை அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில், சம்பவத்தில் உடந்தையாக இருந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. தாக்குதலுக்கு உள்ளான மாணவன் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் பாடசாலையின் மேல் மாடிக்கு அழைத்துச் வெல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.கைது செய்யப்பட்ட பெண் ஆசிரியை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் 

அதிபர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.