“யாழ்” விருது பெறும் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் திருப்பணிச் சபை..
யாழ்.மாநகரசபையினால் வழங்கப்படும் “யாழ்” விருதி இம்முறை திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.
யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் நல்லூர் கந்தனின் பெருந்திருவிழாவினை முன்னிட்டு வெளியிடப்படும் நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு விழா இன்று(12) நாவலர் மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் அவ் விழாவில் வைத்து இவ் விருதும் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாண மாநகர சபையின் சைவ சமய விவகார குழுவினரால் சைவத்திற்கும் தமிழுக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றியவர்களைக் கௌரவித்து ' யாழ்.விருது' வருடா வருடம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் இவ்வாண்டு ஈழத்தின் வரலாற்று சிறப்பு மிக்க, சமய குரவர்களின் பாடல் பெற்ற, சிவத்தலமான, திருக்கேதீச்சர ஆலய கும்பாபிஷேகப் பணிகளினை ஆற்றி ஈழத்தில் சைவ சமயம் மறுமலர்சியுற துணை செய்து இறைபணி புரிந்த திருக்கேத்தீச்சர ஆலய திருப்பணிச் சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.