வடமாகாண ஆளுநருக்கு எதிரான சுகயீன விடுமுறை போராட்டம் பிசு.. பிசுத்தது..! போராட்டத்தில் பங்கேற்கும்படி அழுத்தம் கொடுத்தோர் குறித்து ஆளுநருக்கு முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநருக்கு எதிரான சுகயீன விடுமுறை போராட்டம் பிசு.. பிசுத்தது..! போராட்டத்தில் பங்கேற்கும்படி அழுத்தம் கொடுத்தோர் குறித்து ஆளுநருக்கு முறைப்பாடு..

வடமாகாண ஆளுநருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சுகயீன விடுமுறைப் போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

மாகாண விவசாய பணிப்பாளராக கடமையாற்றிய சிவகுமாரை அவர் வகித்த பதவியில் இருந்து வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நீக்கியமை தொடர்பிலும் 

அவரால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட கருத்து தொடர்பிலும் நேற்றைய தினம் புதன்கிழமை ஒருநாள் சுகயீன விடுமுறை போராட்டம் அறிவிக்கப்பட்டது.

எனினும் போராட்டத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் விவசாய திணைக்கள உத்தியோர்கள் 

ஐந்துக்கும் குறைவானவர்களே போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள 98 உத்தியோத்தர்களில் 4 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 114 பேரில் 4 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் கடமை ஆற்றும் 96 உத்தியோகத்தர்களில் 5 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 230 உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் 49 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இந்நிலையில் வடமாகாண விவசாயத் தினக்களத்தின் பணியாற்றுகின்ற உயர்நிலை அதிகாரிகள் சிலர் ஊழியர்களுக்கு தொலைபேசி வழியாக அழுத்தம் கொடுத்துள்ளனர். 

குறித்த விடயம் ஆளுநரின் கவனத்திற்கு ஆதாரங்களுடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு