SuperTopAds

சமந்தாவை நேரில் சந்தித்தால் கட்டிப்பிடிப்பேன்!! -சர்சையை கிளப்பும் நாகசைதன்யா-

ஆசிரியர் - Editor II
சமந்தாவை நேரில் சந்தித்தால் கட்டிப்பிடிப்பேன்!! -சர்சையை கிளப்பும் நாகசைதன்யா-

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து பின் விவாகரத்து பெற்றனர். 

இந்த நிலையில் அமீர் கானின் லால்சிங் சத்தா படத்தில் நடித்துள்ள நாகசைதன்யா அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சமந்தாவை நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நாக சைதன்யா ஒரு ஹாய் சொல்லிவிட்டு, கட்டிப்பிடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கையில் இருக்கும் டாட்டூ பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அது தன் திருமண நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.