யாழ்.காரைநகர் பெற்றோல் செற்றில் வாளை காட்டி அச்சுறுத்திய இருவர் கைது, பெற்றோல் செற் உரிமையாளரின் உறவினர் வீடு தீக்கிரை...

ஆசிரியர் - Editor I
யாழ்.காரைநகர் பெற்றோல் செற்றில் வாளை காட்டி அச்சுறுத்திய இருவர் கைது, பெற்றோல் செற் உரிமையாளரின் உறவினர் வீடு தீக்கிரை...

யாழ்.காரைநகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளை காட்டி அச்சுறுத்தியதுடன் குழப்பம் விளைவித்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் உறவினர் வீடு 7 பேர் கொண்ட் வன்முறைக் கும்பலினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலை எரிபொருள் நிரப்ப வந்த இரு இளைஞர்கள் அங்கு குழப்பத்தை ஏற்படுத்தி, எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன் , 

பணியாளர்களுக்கு வாளினை காட்டி மிரட்டியும் உள்ளனர். சம்பவத்தினை அடுத்து இரு இளைஞர்களையும் ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

ந்நிலையில் சம்பவம் நடைபெறும்போது , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நின்றிருந்த உரிமையாளரின் உறவினரான ர.பொன்னம்பலம் என்பவரின் வீட்டினுள் இரவு புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்துள்ளது. 

வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீ வைப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு