துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களை மோதிவிட்டு தப்பி சென்ற ஹயஸ்! இளைஞன் பலி, மற்றொருவர் காயம், யாழ்.நுணாவில் பகுதியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞர்களை மோதிவிட்டு தப்பி சென்ற ஹயஸ்! இளைஞன் பலி, மற்றொருவர் காயம், யாழ்.நுணாவில் பகுதியில் சம்பவம்..

யாழ்.நுணாவில் பகுதியில் நேற்றுமுன்தினம் 7ம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு இளைஞன் படுகாயமடைந்துள்ளான். 

சாவகச்சேரி நகர் பகுதியில் இருந்து நுணாவில் நோக்கி A9 வீதி ஊடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர்களை அதே திசையில் பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதிவிட்டு தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 26 வயதான க. நிசாந்தன் என்பவர் விபத்தில் சிக்கி பலியானதுடன், அவருடன் பயணித்த மட்டுவில் தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான தி.பார்த்தீபன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் 

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு