7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி!! -9 வருடங்களின் பின் தாயிடம் திரும்பி வந்தார்-

ஆசிரியர் - Editor II
7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி!! -9 வருடங்களின் பின் தாயிடம் திரும்பி வந்தார்-

இந்தியா - மும்பையில் 9 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்டு காணாமல் போன சிறுமி, தான் காணாமல்போனபோது இணையத்தில் பதிவேற்றப்பட்ட புகைப்படத்தை பார்த்து பெற்றோருடன் இணைந்துள்ளார்.

7 வயதில் தனது அண்ணனுடன் பாடசாலைக்குச் சென்ற பூஜாவை, ஹென்ரி டிசோசா என்பவர் ஐஸ்கிரீம் வாங்கித்தருவதாக ஆசை காட்டி அச் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். 

தனக்கு குழந்தை இல்லாததால் பூஜாவை கடத்திய ஹென்ரி டிசோசா, மனைவிக்கு குழந்தை பிறந்ததும் பூஜாவின் படிப்பை நிறுத்தி வீட்டு வேலை செய்யவைத்து கொடுமைபடுத்தியுள்ளார். 

ஒருநாள் மதுபோதையில் நீ என் குழந்தை இல்லை என அவர் உளறியதை அடுத்து தனது கடந்த காலம் குறித்து பூஜா இணையத்தில் தேடியுள்ளார். 2013 ஆம் ஆண்டு காணாமல் போனதாக தனது புகைப்படம் பதிவேற்றப்பட்டிருப்பதை பார்த்த பூஜா அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வீடியோ காலில் பேசியபோது அவரது தாயார் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார்.

தாயாரின் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வசித்த பூஜாவை மீட்ட பொலிஸார் ஹென்ரியை கைது செய்தனர்.

இரு வருடங்களாக தீயணைப்பு வாகனத்தை திருத்த முடியாத யாழ்.மாநகர நிர்வாகம்..

மேலும் சங்கதிக்கு