யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து கட்டணம் உச்சம்! ஆளுநரின் கவனத்திற்கு சென்றது விடயம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் - கொழும்பு பேருந்து கட்டணம் உச்சம்! ஆளுநரின் கவனத்திற்கு சென்றது விடயம், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரிக்கை..

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு, அரைச்சொகுசு பேருந்துகள் அதிகளவான பஸ் கட்டணங்களை அறவிடுவத தொடர்பாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு சொன்ற நிலையில் அதிக கட்டணம் அறவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என ஆளுநர் கூறியுள்ளார். 

சாதாரண பொதுமக்கள், தமது பயணங்களுக்கான ஆசன முற்பதிவினைச் செய்வதற்கு முயன்றபோது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலதிகமாக தொகை கோரப்பட்டுள்ளதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குறிப்பாக, முற்பகுதியில் இருக்கைகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட சூட்சுமங்களையும் அவர்கள் பயன்படுத்தி கூடிய தொகையை அறிவிடுவதற்கு முயற்சித்ததோடு சமகாலத்தில் காணப்படும் வாகனப் பயணங்களின் வீழ்ச்சியையும் பயன்படுத்தி இவ்வாறு எல்லையற்ற வகையில் 

கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசன முற்பதிவு செய்யும் முகவர்களுடன் பயணிகள் மேற்கொண்ட ஒலிப்பதிவுகளும் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆளுநர் கருத்து வெளியிடுகையில் வடக்கிலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து பயணிகள் பஸ்களும் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை அறவிடுமாறு நான் வலியுறுதுகின்றேன். 

மேலும், இவ்விதமாக செயற்படுவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட கரினை என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு