SuperTopAds

வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் காதை கடித்து துப்பிய நபர்..! வடக்கில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாய்த்தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் காதை கடித்து துப்பிய நபர்..! வடக்கில் நடந்த சம்பவம்..

இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மற்றவருடைய காதை கடித்து துப்பிய சம்பவ இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் நேற்று 7.30 மணியளவில் வவுனியா - வீரபுரம் சின்னத்தன்பனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இரு தரப்பினருக்குமிடையே வாய்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை பின்னர் மோதலாக மாறியுள்ளது. 

இதன்போது ஒரு இளைஞர் மோதலில் ஈடுபட்ட மற்றைய நபரின் காதை கடித்து துப்பியிருக்கின்றார். 

காயமடைந்தவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.