கட்டுப் பணம் செலுத்தியது காங்கிரஸ் !

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளத் தீர்மா னித்துள்ள அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.சாவகச்சேரி நகர சபைக் கான வேட்பு மனுக் கோரல் கடந்த 27ஆம் திகதி வெளியிடப்பட்டது.
நேற்றுவரை இரு கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன. நேற்று தமிழ்க் காங்கிரஸூம் கட்டுப்பணத்தைச் செலுத்தியது.தமிழ்க் காங்கிரஸ் கட்சியும், ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டிருந்தன. அந்தக் கூட்டு சாத்தியப்படாத நிலையில் தமிழ்க் காங்கிரஸ் தனித்துத் தேர்தலில் களமிறங்கியுள்ளது