கவர்ச்சியை மறுக்கும் சாய்பல்லவி!!
தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிப் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள சாய்பல்லவிக்கு அதிக ரசிகர்களை தன்வசம் ஈர்த்துள்ளார்.
எப்போதும் தனது கதாபாத்திரம் வணிக ரீதியில் இல்லாமல் அழுத்தமாக இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதால்தான் அவரது படங்கள் தோல்வியை சந்திக்கின்றன என்று கூறுகிறார்கள்.
இதனால் சிலர் சாய்பல்லவியை அணுகி இதுபோன்ற கனமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பது உங்கள் சினிமா வாழ்க்கையை பாதிக்கும். எனவே கதைகளை மாற்றுங்கள். கவர்ச்சியாகவும், காதல் காட்சிகளில் நெருக்கமாகவும் நடிக்க சம்மதியுங்கள் என்று வற்புறுத்தியுள்ளனர்.
அவர்களிடம் சாய்பல்லவி 'அப்படியெல்லாம் நடிக்க முடியாது. சினிமாவில் வாய்ப்புகள் வரவில்லை என்றால் டாக்டர் வேலையை பார்ப்பேன் அல்லது ஷாப் வைத்து சம்பாதிப்பேன். இல்லையென்றால் ஏதாவது வேலைக்கு போவேன்.
எனது மதிப்பை குறைத்துக்கொண்டு விருப்பமில்லாத கதை மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டேன்' என்று சாய் பல்லவி கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.