முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டு பார்க்கலாம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு சிவாஜிலிங்கம் சவால்..

ஆசிரியர் - Editor I
முடிந்தால் நடவடிக்கை எடுக்கட்டு பார்க்கலாம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு சிவாஜிலிங்கம் சவால்..

வடமாகாணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவதும், தலைகீழாக பறக்க விடு வதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்காக நடவடி க்கை எடுக்க முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக்கட்டும் பார்க்கலாம். என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியிருக்கின்றார். 

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக வியலார் சந்திப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வடமாகாணசபையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒ ழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோதே சிவாஜி

லிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், வடமா காணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எ ங்களுடைய பிரச்சினை. அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். அதேபோல் மாகாண பாடசா லைகளில் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுமாறும் கேட்டோம். அதுவும் எங்களின் பிர

ச்சினை அது தெரியாமல் கருத்து கூறும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் நான் கேட்கிறேன் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு