SuperTopAds

பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று!!

ஆசிரியர் - Editor II
பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'ஜூலை 26 ஆம் திகதி, செவ்வாய் அன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்ட பின், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜூலை 30 ஆம் திகதி காலை மீண்டும் பரிசோதனை செய்துகொண்டார். 

அதில் 'மீண்டும்' கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளார் என்று டாக்டர் குழு தெரிவித்துள்ளது.