கை துண்டிக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்! வடக்கில் நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கை துண்டிக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட இளம் குடும்பஸ்த்தர்! வடக்கில் நடந்த சம்பவம்..

வவுனியா சிதம்பரபுரம் - ஆச்சிபுரம் பகுதியில் மிக குரூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் இளம் குடும்பஸ்த்தரின் சடலம்  மீட்கப்பட்டிருக்கின்றது. 

நேற்றய தினம் மாலை அந்தப் பகுதிக்குச் சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அவரது உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டனர்.

குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சா என்று அறியப்பட்ட யோன்சன் (வயது - 30) என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.

சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு