ஆசிய கிண்ணத்தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றம்!! -நடத்தும் உரிமை இலங்கைக்கு-

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கையில் நடத்துவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதில், பல கட்ட பேச்சுவார்த்தைகளின் பின் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு தொடரை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ள ஆசிய கிரிக்கெட் பேரவையில் தலைவர் ஜெய் ஷா நேற்று புதன்கிழமை தகவல் வெளியிட்டுள்ளார்.
'போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றினாலும், இலங்கை தொடர்ந்தும் தொடரை நடத்தும் உரிமையை தக்க வைத்துக் கொள்ளும்' என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.




