எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கி சூடு..! பொலிஸார் தீவிர விசாரணை..

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் இடம்பெற்ற தகராறினை தொடர்ந்து எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர்களை அச்சுறுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

குறித்த சம்பவம் பதுளை - ஹிந்தகொட பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்றய தினம் இரவு 11.30 மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. 

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர்களுக்கும், எரிபொருள் பெறவந்த நபர்களுக்குமிடையில் தகராறு மூண்டுள்ளது. இதனையடுத்து ஊழியர்களை அச்சுறுத்தும் நோக்கி எரிபொருள் பெறவந்த ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். 

வானத்தை நோக்கி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதால் எவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை. எனவும் துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதால் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மத்தியா? மகளா? டக்ளஸ்சை எதிர்க்கத் துணிந்தார் ஆளுநர் சாள்ஸ்..

மேலும் சங்கதிக்கு