SuperTopAds

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான “ராம்” விடுதலை..!

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவரான “ராம்” விடுதலை..!

2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் 2015ம் ஆண்டு மீள பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான ராம் இன்று 6 வருட தண்டணை நிறைவில் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். 

முன்னாள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத்தளபதியாக செயற்பட்டிருந்த ராம் கடந்த 2009 மே 19 யுத்தம் மௌனித்த பின்னர் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதையடுத்து 

இராணுவ புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பின் கீழ் அவர் அம்பாறை தம்பிலுவில் பிரதேசத்தில் குடியேறி வாழ்வாதாரமாக விவசாயம் மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில் கடந்த 2015 ம் ஆண்டு ஆட்சி மாற்றம் பெற்று ரணில் அரசாங்கம் ஆட்சியேறியதும் சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை குண்டு அங்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் பெயரில் ராமை பயங்ரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்தனர். 

பின்னர் விசாரணையின் பின்னர் அவருக்கு எதிராக வழக்கு தொடந்து அவரை தொடர்ந்து வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்இதனை தொடர்ந்து அவரை பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட் நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட 6 வருடகால தண்டனைக்காலம் முடிவுற்ற நிலையில் 

இன்று செவ்வாய்க்கிழமை அவரை மட்டக்களப்பு உயர் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்டபோது அவரை நீதிபதி விடுதலை வழங்கப்பட்டு அவரை விடுதலை செய்துள்ளார்.