விக்ரம் உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!!

ஆசிரியர் - Editor II
விக்ரம் உடன் இணையும் ராஷ்மிகா மந்தனா!!

கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை அடுத்து விக்ரம் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்திருந்தது.

'சியான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா, நீலம் ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், 'சியான் 61' படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கிளாமர் அல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் ராஷ்மிகா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு