பாடசாலைகள் அனைத்திற்கும் ஒருவாரம் விடுமுறை..! கல்வி அமைச்சு அறிவிப்பு...

ஆசிரியர் - Editor I
பாடசாலைகள் அனைத்திற்கும் ஒருவாரம் விடுமுறை..! கல்வி அமைச்சு அறிவிப்பு...

நாடு முழுவதும் நாளை 4ம் திகதி தொடக்கம் 8ம் திகதி வெள்ளிக்கிழமைவரையில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 2 வாரங்களில் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையின் முன்னேற்றம் குறித்து ஆராய்ந்த பின்னர், கல்வி அமைச்சின் அதிகாரிகள், 

மாகாணக் கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுடன் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற கலந்துரையாடலில், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் எரிபொருள் விநியோகம் குறித்த அறிவிப்புகள் மேலும் கவனத்தில் கொண்டு, 

04.07.2022 முதல் 08.07.2022 வரையிலான வாரம் நாடுமுழுவதும். உள்ள சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வாரமாக அறிவிக்கப்படும்.

இந்த வாரத்தில் பாடசாலை நேரம் இழக்கப்பட்டால், அடுத்த பாடசாலை விடுமுறை காலத்தில் ஈடுசெய்யப்படும் என்று கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு