நிர்வாண படத்தை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா!!

ஆசிரியர் - Editor II
நிர்வாண படத்தை பகிர்ந்த விஜய் தேவரகொண்டா!!

பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வரும் லைகர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவருடன் பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனும் நடித்திருக்கிறார்.

அண்மையில் மைக் டைசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு லைகர் படக்குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். 

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், விஜய் தேவரகொண்டாவின் நிர்வாண புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது, விஜய் தேவரகொண்டா கையில் பூங்கொத்துடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு 'இந்தப் படம் என்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டது. உடல் அளவிலும், மனதளவிலும், மிகவும் கடினமான பாத்திரம். நான் உங்களிடம் எல்லாவற்றையும் கொடுக்கிறேன். விரைவில் வருகிறது லைகர்' என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு