வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு ஆறுதலான செய்தி..! ஆளுநர் வகுத்துள்ள புதிய திட்டம்...

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு ஆறுதலான செய்தி..! ஆளுநர் வகுத்துள்ள புதிய திட்டம்...

வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பயணத்தை இலகுபடுத்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். 

இதன்படி வடமாகாணசபையிடம் உள்ள பேருந்துகளை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் 

தத்தமது பணி இடங்களில் அல்லது அதற்கு அண்மையாக தங்கி நின்று சேவையாற்றுவதற்கு உகந்ததாக தங்கும் விடுதிகளை ஒழுங்கமைப்பு செய்வதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

மேலும் இந்த விடயங்கள் தொடர்பாக ஆளுநர் துறை சார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தியுள்ளதுடன், பணிகளை ஆரம்பிக்கும்படியும் பணிப்புரை வழங்கியிருக்கின்றார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு