புதிய சாதனை படைத்த விக்ரம்!!

ஆசிரியர் - Editor II
புதிய சாதனை படைத்த விக்ரம்!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. 

விக்ரம் திரைப்படம் 4 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளதை படக்குழுவினர் போஸ்டருடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், விக்ரம் படத்தின் மொத்த வசூல் நாளைக்குள் உலக அளவில் 400 கோடி ரூபாவை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைக்காலமாக எந்த ஒரு தமிழ்படமும் இந்த வசூலை எட்டவில்லை. இந்த படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி கமல் மட்டும் அல்லாது அவரது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு