வீட்டில் சேகரித்துவைக்கப்பட்டிருந்த பெற்றோல் மீது விழுந்த குப்பி விளக்கு..! 19 வயதான இளம்பெண் உடல்கருகி பலி..

ஆசிரியர் - Editor I
வீட்டில் சேகரித்துவைக்கப்பட்டிருந்த பெற்றோல் மீது விழுந்த குப்பி விளக்கு..! 19 வயதான இளம்பெண் உடல்கருகி பலி..

விளக்கு தவறி விழுந்து வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மீது தீ பிடித்ததில் 19 யதான இளம் பெண் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு - கரடியனாறு நெல்லுச்சேனை பகுதியில் நேற்றய தினம் மாலை இடம்பெற்றிருக்கின்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,  

(19) வயதுடைய நற்குணம் கஜேந்தினி என்பவரே இந்த விபத்தில் பலியானவராவார். 

ஆரையம்பதி தனியார் ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதி தனது வீட்டில் மின்வெட்டினால் விளக்கினை எடுத்துச்செல்லும்போது 

அது தவறுதலாக விளக்கு கீழே விழுந்ததில் பாவனைக்காக வீட்டில் வைத்திருந்த பொற்றோல் தீப்பிடித்ததில் படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் குறித்த யுவதி வீட்டிலிருந்தவாறு மரணமானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் 

சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார். மேலதிக விசாரணைகளை கரடியநாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு