எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதுக்கப்படும் ஆயிரக்கணக்கான லீற்றர் எரிபொருள்..! பொறுப்புவாய்ந்தோர் உறக்கம்..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதுக்கப்படும் ஆயிரக்கணக்கான லீற்றர் எரிபொருள்..! பொறுப்புவாய்ந்தோர் உறக்கம்..

யாழ்.பருத்தித்துறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள இருப்பை வெளிப்படுத்தக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டங்களால் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி ஊடான போக்குவரத்து பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருக்கின்றது. 

இது குறித்து மேலும் தொியவருவதாவது, பருத்தித்துறை - கிராமக்கோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தினை முற்றுகையிட்ட பொதுமக்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள இருப்பு எவ்வளவு என்பதை அம்பலப்படுத்துமாறு கோரி போராட்டத்தை நடத்தினர். 

இதனையடுத்து பொலிஸார் இந்த விடயத்தில் தலையிட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தினருடன் பேசியபோது தங்களிடம் இருப்பு எதுவுமில்லை. என அவர்கள் கூறியிருக்கின்றனர். எனினும் மக்கள் விடாப்பிடியாக இருப்பை பரிசோதிக்குமாறு கேட்டுவந்தனர். 

அதன் பின்னர் இருப்பு பரிசோதிக்கப்பட்டபோது அங்கே உண்மையிலேயே எரிபொருள் இல்லை. என்பது கண்டறியப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து பொதுமக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றிருக்கின்றனர். 

பின்னர் மீண்டும் மாலை 5 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இங்கேயும் எரிபொருள் நிரப்பு நிலையத்திலுள்ள இருப்பை காண்பிக்கும்படி மக்கள் கேட்டிருந்தனர். ஆனாலும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் மறுத்தனர். 

ஆனாலும் மக்கள் விடாப்பிடியாக நின்ற நிலையில் இருப்பு அளவீடு செய்யப்பட்டபோது அங்கே 1700 லீற்றர் பெற்றோல் இருப்பது உறுதியானது. இந்நிலையில் அதனை பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி கேட்டபோதும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் நிலையத்தை பூட்டிவிட்டு 

அங்கிருந்து சென்றிருக்கின்றனர். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு