SuperTopAds

எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக உட்கார்ந்திருந்து பாடசாலை உப அதிபர் போராட்டம்..!

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக உட்கார்ந்திருந்து பாடசாலை உப அதிபர் போராட்டம்..!

பாடசாலை உப அதிபர் ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக அமர்ந்திருந்து போராட்டம் நடத்தியுள்ளார். 

இந்த சம்பவம் நேற்றய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, பாடசாலை உப அதிபர் ஒருவர் எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் நின்றுள்ளார். 

எனினும் அரச ஊழியர்களுக்கு நேற்றய தினம் எரிபொருள் வழங்கப்படாது. என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் எரிபொருள் பெறுவதற்காக வந்திருந்த உப அதிபரை அங்கிருந்த சிலர் மிக தரம் தாழ்ந்து பேசியுள்ளனர். 

அதனால் கோபமடைந்த உப அதிபர் உங்கள் பிள்ளைகளுக்கும் கல்வி கற்பிப்பது ஒரு ஆசிரியர் என்பதை மறக்காதீர்கள். 

ஆசிரியர்கள் மட்டும் இல்லை என்றால் தாய் மொழியின் முதல் எழுத்தும் தொியாத ஒரு சமூகம் உருவாக்கப்படும். 

அத்தகைய ஆசிரியர்கள் குறித்து யாரும் தரக்குறைவாக பேசக்கூடாது. என கோஷமிட்டதுடன், 

கடமைக்கு செல்லாவிட்டால் விடுமுறையாக ஆக்கப்படுகிறது. கடமைக்கு செல்ல எரிபொருள் வேண்டும். 

எரிபொருள் பெற சென்றால் தரக்குறைவாக பேசுகிறார்கள். கல்வியே தேவையில்லை பெற்றோல் வேண்டும் என்கிறார்கள். 

ஆசிரியர்கள் அவ்வளவு தரம் தாழ்ந்தவர்கள் அல்ல. ஆசிரியர்கள் தங்களுக்கு முறையாக எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். 

அல்லாதுபோனால் கடமைக்கு செல்லாது போராடவேண்டும். இந்த விடயத்தை கல்வி அமைச்சும், தொழிற்சங்கங்களும் கவனிக்கவேண்டும். 

என தொடர்ந்து பேசினார். இந்நிலையில் பொலிஸாரும், பொதுமக்களும் உப அதிபருடன் சமாதானம் பேசியதுடன், போராட்டத்தை கைவிட கேட்டனர். 

அதனையடுத்து ஆசிரியர் தனது போராட்டத்தை கைவிட்டார். பின்னர் உப அதிபர் கடமைக்கு செல்வதற்கான எரிபொருள் வழங்கப்பட்டது.