யாழ்.மாவட்டத்தில் பிரதேச செயலக ஊழியர்களுக்கு மட்டும் எரிபொருள்! குழப்பத்திற்கு பதிலளித்தார் யாழ்.மாவட்டச் செயலர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பிரதேச செயலக ஊழியர்களுக்கு மட்டும் எரிபொருள்! குழப்பத்திற்கு பதிலளித்தார் யாழ்.மாவட்டச் செயலர்...

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய திணைக்கள ஊழியர்களுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியிருக்கின்றார். 

பிரதேச செயலக ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஏனைய திணைக்கள ஊழியர்கள் எரிபொருளுக்காக காத்திருந்த நிலையில் திருப்பி அனுப்பபட்டிருக்கின்றார்கள். 

இது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்.மாவட்டத்திலுள்ள சில பிரதேச செயலகங்கள் தமது ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. அவ்வாறே ஏனைய திணைக்களங்களுக்கும் வழங்கப்படும். 

எனினும் அது தேவையின் அடிப்படையிலேயே வழங்கப்படும். எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டச் செயலர் கூறியுள்ளார். 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு