யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்றிருந்த 4 மீனவர்கள் கரை திரும்பவில்லை..

யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியிலிருந்து நேற்று கடற்றொழிலுக்கு சென்றிருந்த மீனவர்கள் 4 பேர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் கடலுக்குச் சென்று இன்று காலை 10 மணியளவில் கரை திரும்ப வேண்டியவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் ஊடாக  தேடுவதற்க்கான நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுவருவதாக  

பிரதேச கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதேவேளை எரிபொருள் இல்லாமையால் தாம் அவர்களை தேடமுடியாத நிலையில் உள்ளதாகவும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு