யாழ்.மாவட்டத்திற்கான புகைரத சேவைகளை அதிகரிப்பது மற்றும், சரக்கு புகைரத சேவைகளை அதிகரிப்பது குறித்த அங்கஜன் ஆய்வு..! 

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கான புகைரத சேவைகளை அதிகரிப்பது மற்றும், சரக்கு புகைரத சேவைகளை அதிகரிப்பது குறித்த அங்கஜன் ஆய்வு..! 

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் புகைரத சேவைகளை அதிகரிப்பது தொடர்பாகவும், சரக்கு புகைரத சேவைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபருடருடன் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ள யாழ்.புகையிரத நிலையத்துக்குச் சென்றிருந்த வேளையில் இச்சந்திப்பை மேற்கொண்டதாகவும் பொதுமக்கள் சேவை மற்றும் சரக்கு ரயில் சேவைகளை மேலும் அதிகரிப்பதானது தற்போதைய எரிபொருள் நெருக்கடி நிலையில் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் 

பெரிதும் உதவியாக அமையும் எனவும் இதன்போது அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு