நிரூபித்து காட்டுங்கள், எரிபொருள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன்..!

ஆசிரியர் - Editor I
நிரூபித்து காட்டுங்கள், எரிபொருள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கிவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன்..!

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் தேடிப்பாருங்கள் எனது பெயரில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையம் இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன். என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற எரிபொருள் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயரில் எரிபொருள் நிலையம் இருப்பதாக சிலர் தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

எனது உறவினரின் பெயரில் எரிபொருள் நிலையம் செயற்படுகிறது. அதனைப் பயன்படுத்தி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முகமாக சிலர் செயற்படுகின்றனர்.

இலங்கையில் மட்டுமல்ல உலகில் பாகத்திலாவது எனது பெயரில் எரிபொருள் நிலையம் இருந்தாலோ அல்லது எரிபொருள் நிலையம் தொடர்பான பணம் எனது பெயரில் வைப் லிடப்பட்டாலலோ நிரூபித்து கட்டுங்கள்.

பதவி விலகுவது மட்டுமல்ல குறித்து எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிபொருட்களை இலவசமாக மக்களுக்கு வழங்க தயாராக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு