பட்டப்பகலில் கத்திமுனையில் வழிப்பறி..! வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பொதுமக்கள், வல்லையில் நடந்த துணிகரம்...

ஆசிரியர் - Editor I
பட்டப்பகலில் கத்திமுனையில் வழிப்பறி..! வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய பொதுமக்கள், வல்லையில் நடந்த துணிகரம்...

யாழ்.அச்சுவேலி - வல்லை பகுதியில் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்த இருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு அடித்து நொருக்கப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இறைச்சி வியாபாரியிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துகொண்டு தப்பி ஓடியவர்களே மடக்கி பிடிக்கப்பட்டனர். 

புத்துாரில் இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் வல்லை வீதி ஊடாக வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது அப்பகுதியால் மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் இருவர், 

கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி 3 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்நிலையில் வியாபாரி கோபமடைந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட ஒருவனை துரத்திச் சென்று தாக்கியுள்ளார். 

சம்பவத்தை அறிந்து வீதியால் பயணித்தவர்களும் வழிப்பறி கள்ளனை முறையாக கவனித்துள்ளனர். எனினும் மற்றொரு இளைஞன் தப்பி ஒடிய நிலையில் தேடுதல் நடத்திய பொதுமக்கள், 

நாவல்காடு பகுதியில் கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த நிலையில் கையும், களவுமாக பிடித்ததுடன், அடுத்து நெருக்கினர். இதன்போது பிறப்புறுப்பில் மறைத்து வைத்திருந்த பணத்தையும் மீட்டுள்ளனர். 

குறித்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது. வீதியில் வைத்து இளைஞர்கள் முறையாக கவனிக்கப்பட்ட பின்னர் 

அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு