புலிகளின் ஆயுதங்களைத் தேடி இராணுவத் தளத்தினுள் தேடுதல்!

முல்லைத்தீவு - தேராவில் 68-3 இராணுவ பிரிகேட் தலைமையகத்தில் இன்று தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையில் எந்தவிதமான பொருட்களும் மீட்கப்படவில்லை.
சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.