SuperTopAds

19 வயதான இளைஞனை காணவில்லை..! தேடி கண்டுபிடித்து தாருங்கள் தாயார் உருக்கம், கணவனும் காணாமல் ஆக்கப்பட்டவராம்..

ஆசிரியர் - Editor I
19 வயதான இளைஞனை காணவில்லை..! தேடி கண்டுபிடித்து தாருங்கள் தாயார் உருக்கம், கணவனும் காணாமல் ஆக்கப்பட்டவராம்..

தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சென்றிருந்த 19 வயதான இளைஞன் காணாமல்போயுள்ளதாக குறித்த இளைஞனின் தாயார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தொிவித்துள்ளார். 

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வி பகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் என்ற இளைஞனே இவ்வாறு காணாமல்போயுள்ளார். 

நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை வீட்டிலிருந்து தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில் வீடு திரும்பவில்லை. 

என தயார் உதயராஜ் றோஜா தொிவித்துள்ளார். எனது கணவர் உதயராஜ் 26-12-2005 அன்று யாழ்.சாவகச்சேரி மீசாலையில் வைத்து அரச படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். 

இன்று வரை அவர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலையில் எனது ஒரே ஒரு மகன் அம்சவர்தன் காணாமல் போயுள்ளார் எனவே எனது அன்பு மகன் அம்சவர்தனை கண்டுபிடித்து தாருங்கள் என கோரியுள்ளார். 

தொடர்புகளுக்கு இலக்கம் 72 A கனகாம்பிகைக்குளம் கிளிநொச்சி

தொலைபேசி இலக்கம் 0741344699