யாழ்.பல்கலைக்கழக முன்றலில் மாணவி மீது அசிட் வீசப்போவதாக தண்ணீர் போத்தலை வைத்து அச்சுறுத்திய நபர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.பல்கலைக்கழக முன்றலில் மாணவி மீது அசிட் வீசப்போவதாக தண்ணீர் போத்தலை வைத்து அச்சுறுத்திய நபர்..!

யாழ்.பல்கலைகழக முன்றலில் இன்று காலை 8 மணியளவில் பல்கலைக்கழக புகுமுக மாணவியின் மீது அசிட் வீசப்போவதாக அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புகுமுக மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வுக்காக வந்திருந்த மாணவி ஒருவரை வழிமறித்த  மோட்டார் சைக்கிளில் வந்திருந்த நபர் அசிட் வீசப்போவதாக அச்சுறுத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தை அவ்வழியாக வந்த பல்கலைக்கழக மாணவர்கள் மாணவியை பல்கலைக்கழகத்திற்குள் அனுப்பிவிட்டு சம்மந்தப்பட்ட இளைஞனை விசாரித்துள்ளனர்.

இதன்போது அவர் உரும்பிராய் பகுதியை சேர்ந்தவர் எனவும் அவருடைய கையில் இருந்தது அசிட் போத்தல் அல்ல அது வெறும் தண்ணீர் என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்திய மாணவர்கள் குறித்த நபரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பாக அந்த இளைஞனுடன் தொடர்புடையவர்கள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசியிருந்தனர்.

அவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் அவர்களுக்குள் இடம்பெற்ற பேச்சுவார்தையின்போது இடையிட்ட சிலர் அசிட் வீச முயற்சித்ததாக சித்தரித்தனர்.

என குறிப்பிட்டதுடன் அவர்கள் இருவரும் காதலர்கள் எனவும் கூறியதுடன், அதற்கான ஆதாரங்களையும் காண்பித்தனர்.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு