அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் வீதி ஓரத்திலிருந்து மீட்பு..!

ஆசிரியர் - Editor I
அடி காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் வீதி ஓரத்திலிருந்து மீட்பு..!

அடிகாயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியா - பஸார் வீதியில் நேற்றய தினம் இரவு இடம்பெற்றுள்ளது. 

நகைக்கடை ஒன்றின் முன்பாக ஆண் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

இதனை அவதானித்தவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆணின் தலை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அடிக காயங்கள் காணப்படுகின்றன. 

சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா நகரப் பகுதியில் நாட்டாண்மை தொழில் புரிபவர்,

என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மூத்த அதிகாரிகள் இளங்கோவன் - செந்தில்நந்தனன் இடமாற்றத்தில் நடந்தது என்ன? (ரிப்போர்ட்)

மேலும் சங்கதிக்கு