கனடாவில் காணாமல்போன இலங்கை தமிழர்!!

ஆசிரியர் - Editor II
கனடாவில் காணாமல்போன இலங்கை தமிழர்!!

கனடாவில் வசித்து வரும் இலங்கை தமிழர் ஒருவர் திடீரென காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவித்துள்ள ரொறன்ரோ பொலிஸார் அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரியுள்ளனர். 

தம்பிராஜா ஸ்ரீபதிராஜா என்ற 87 வயதான முதியவரே காணாமல்போயுள்ளதாக தெரியவருகிறது. பொலிஸாரின் தகவலின் படி குறித்த நபர் ஜூன் 7 ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. 

அத்துடன் காணாமல்போன நபர் 5 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், அவர் காணாமல்போன போது சாம்பல் நிற உடை அணிந்திருந்ததாகவும் பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு