511 குழந்தைகளுக்கு திடீர் திருமணம்!! -கொரோனா ஊரடங்கில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள்-
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு காலத்தில் மட்டும் 511 குழந்தை திருமணங்கள் நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிந்து பாடசாலைகள் திறக்கப்பட்டபோது ஏராளமான மாணவர்களும், மாணவிகளும் பாடசாலைப் கல்வியை தொடராமல் இருந்துள்ளனர்.
இது குறித்து மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள் வாயிலாக இடைநிற்றல் மாணவ, மாணவிகளை கண்டறிவதற்காக ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல மாணவர்கள் வேலைகளுக்கு செல்வதை கண்டறிந்து அத்தகைய மாணவர்கள் மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர். அதேபோன்று மாணவிகளை பொருத்தவரை 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் குழந்தை திருமணத்தை நடத்தியது தெரியவந்தது.
குறிப்பாக 511 மாணவிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாணவிகள் கல்வித்துறையின் நடவடிக்கையால் மீண்டும் பாடசாலைகளின் சேர்க்கப்பட்டு அவர்களின் கல்வி தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.