அடுத்தடுத்து 9 வீடுகளில் துணிகர கொள்ளை..! 3 பேர் சிக்கினர்..

ஆசிரியர் - Editor I
அடுத்தடுத்து 9 வீடுகளில் துணிகர கொள்ளை..! 3 பேர் சிக்கினர்..

9 இடங்களில் இடம்பெற்ற பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 3 இளைஞர்களை பொலிஸார் நேற்றய தினம் கைது செய்திருக்கின்றனர். 

கடந்த மாதம் வவுனியாவின் உக்குளாங்குளம் பகுதியில் 4 வீடுகளிலும், பண்டாரிக்குளம் பகுதியில் 2 வீடுகளிலும், நெளுக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், கூமாங்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும், 

மகாறம்பைக்குளம் பகுதியில் ஒரு வீட்டிலும் என 9 இடங்களில் நகைகள், மோட்டர் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, இலத்திரனியல் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  

குறித்த முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் 

அகமட், திசாநாயக்கா, விக்கிரமசூரிய, டிலீபன், உபாலி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான், தயாளன், திசாநாயக்கா ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த சம்பவம் தொடர்பில் மதவுவைத்தகுளம் (32 வயது), தேக்கவத்தை (வயது 30), 4ம் கட்டை (வயது 35) ஆகிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது அவர்களிடம் இருந்து மோட்டர்கள் 3, சிலிண்டர்கள் 8, ஜெனரேற்றர், தொலைக்காட்சி, கிறைண்டர், சைக்கிள், மோட்டர் சைக்கிள் 

மற்றும் தோடு, மூக்குத்தி சஙகிலி அடங்கிய 2 பவுண் நகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு