வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு! வரிசையில் காத்திருக்கவேண்டாம்..

ஆசிரியர் - Editor I
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு! வரிசையில் காத்திருக்கவேண்டாம்..

வடகிழக்கு மாகாணங்களுக்கு எதிர்வரும் செவ்வாய் கிழமை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது. என லிட்ரோ நிறுவனம் தொிவித்திருக்கின்றது. 

கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகளில் மட்டுமே இன்று எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இன்று 16,000 கொள்கலன்கள் மாத்திரமே விநியோகிக்கப்படும் என்பதால், வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன்படி, அண்மையில் நாட்டை வந்தடைந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன் விநியோகம் இன்றுடன் முடிவடைவதாகவும் மேலும் 2500 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல் நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ள நிலையில், 

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு