ஐ.பி.எல் சீசனில் அதிக ஓட்டங்கள்!! -வார்னர் சாதனையை முறியடித்த பட்லர்-

ஆசிரியர் - Editor II
ஐ.பி.எல் சீசனில் அதிக ஓட்டங்கள்!! -வார்னர் சாதனையை முறியடித்த பட்லர்-

ஐ.பி.எல் ரி-20 தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றதுடன் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. 

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 4 சதங்களுடன் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களுக்கான ஆரஞ்சு நிற தொப்பியை ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கைப்பற்றினார்.

இந்நிலையில், நேற்று நடந்த போட்டியில் ஜோஸ் பட்லர் புதிய சாதனை படைத்தார். ஒரு ஐ.பி.எல் சீசனில் அதிக ஓட்டங்கள் அடித்தவர்களுக்கான வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னரை பின்னுக்குத் தள்ளி பட்லர் 2 ஆவது இடத்தை பிடித்தார். பட்லர் இதுவரை 863 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு