பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்!! -கைப்பற்றியது இலங்கை அணி-

ஆசிரியர் - Editor II
பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்!! -கைப்பற்றியது இலங்கை அணி-

பங்களாதே{க்கு எதிராக உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது.

அத்துடன் இந்த வெற்றிக்கான 12 டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெற்ற இலங்கை தொடரில் மொத்தம் 18 புள்ளிகளை சம்பாதித்துக் கொண்டது. பங்களாதேஷை 2 ஆவது இன்னிங்ஸில் 169 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, வெற்றிக்கு தேவையான 29 ஓட்டங்களை விக்கெட் இழப்பின்றி பெற்றது.

இலங்கையின் வெற்றியில் அசித்த பெர்னாண்டோவின் 10 விக்கெட் குவியலுடனான திறமையான பந்துவீச்சு முக்கிய பங்காற்றியது. ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால் ஆகியோர் குவித்த சதங்கள், திமுத் கருணாரட்ன, ஓஷத பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் என்பனவும் இலங்கையின் வெற்றியில் பங்களிப்பு செய்திருந்தன.

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு