எரிபொருள் நிரப்ப சென்றிருந்த சாரதி மீது பொலிஸார் தாக்குதல்..! சாரதி வைத்தியசாலையில்..

ஆசிரியர் - Editor I
எரிபொருள் நிரப்ப சென்றிருந்த சாரதி மீது பொலிஸார் தாக்குதல்..! சாரதி வைத்தியசாலையில்..

எரிபொருள் நிரப்புவதற்கு சென்றிருந்த சாரதி மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

குறித்த சம்வம் இன்று காலை கல்லாறு பிரதான வீதியில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மேலும் சட்டவிரோத மண் அகழ்வு ஈடுபட்டதாக கூறி கல்லாற்று பிரதானவீதியில் வைத்து தாக்கியதாக தெரிவித்த சாரதி 

ஆனால் தான் எரிபொருள் நிரப்புவதற்காகவே வீடு நோக்கி சென்றதாகவும் இதன்போது டிப்பரை வழிமறித்த பொலிஸார் தன்னை சரமாரியாக தாக்கினர் என தாக்குதலுக்கு இலக்கான சாரதி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. 

தாக்கிய பின்னர் பொலிசார் டிப்பரினை கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளதாகவும், தன்னால் இயலாத நிலையில் வைத்தியசாலைக்கு சென்று உள்ளதாகவும் சாரதி மேலும் கூறியுள்ளார். 

இதேவேளை சம்பவம் தொடர்பாக பொலீசார் கூறுகையில் தமக்கு சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது. 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொழுது மணலைக் கொட்டி விட்டு டிப்பர் தப்பிச் செல்ல முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தாம் சாரதி மீது தாக்ககுதல் நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு