SuperTopAds

அடையாளம் காணப்படாத மர்ம பொருள் வெடித்ததில் காயமடைந்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

ஆசிரியர் - Editor I
அடையாளம் காணப்படாத மர்ம பொருள் வெடித்ததில் காயமடைந்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி..!

அடையாளம் காணப்படாத மர்மப் பொருள் வெடித்ததில் 16 வயதான சிறுமி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

குறித்த சம்பவம் நேற்று மாலை கிளாலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணியை தனது தாயாருடன் இணைந்து குறித்த சிறுமி துப்புரவு செய்து கொண்டிருந்த நிலையில், 

அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. சம்பவத்தில் காயமடைந்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். 

சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருக்கின்றனர்.