சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், பெண் உட்பட 8 பேர் கைது..! வடமாகாணத்தை சேர்ந்தவர்கள்..

ஆசிரியர் - Editor I
சந்தேகத்திற்கிடமான நடமாட்டம், பெண் உட்பட 8 பேர் கைது..! வடமாகாணத்தை சேர்ந்தவர்கள்..

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 8 பேர் புத்தளம் - கருவெலச்செவ பொலிஸாரினால் நேற்றய தினம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பாலமோட்டை, குஞ்சுக்குளம், கொந்தக்காரங்குளம், நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதிகளை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 8 பேரே கைதாகினர். 

இவர்கள் வவுனியாவில் இருந்து பேரூந்து மூலம் புத்தளம் சென்று அங்கு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நிலையில் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டுள்ளதாகவும், 

அதற்காகவே புத்தளம் வருகை தந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு