நகைச்சுவை நடிகர் விக்னேஷ்காந்த்திற்கு திருமணம்

ஆசிரியர் - Editor II
நகைச்சுவை நடிகர் விக்னேஷ்காந்த்திற்கு திருமணம்

யு டியூப் சேனல் மூலம் புகழ்பெற்றவர் விக்னேஷ் காந்த் என்பவர் அதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி நகைச்சுவை நடிகராக தற்போது வலம் வருகின்றார். 

இந்த நிலையில் விக்னேஷ்காந்துக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். 

நிச்சயதார்த்த படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள விக்னேஷ்காந்த் 'நிச்சயதார்த்தம் எளிமையாக நடந்தது. திருமணத்துக்கு அனைவரையும் அழைப்பேன். திருமண திகதி பின்னர் அறிவிக்கப்படும்' என்று தெரிவித்திருக்கிறார்.

மணப்பெண் யார் என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. நட்பு வட்டாரத்தில் விசாரித்த வகையில் உறவுக்கார பெண் என்று தெரிகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு